Monday, April 16, 2007

இலக்கங்களைத் தந்த இந்தியா

திரு. ஸ்ரீஸ்கந்தகராஜா லிங்கம அவர்களாள் யூட்டா தமிழ் சங்கத்தின் பனிமலருக்காக எழுதப்பட்டது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது பொன்மொழி. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொருவகையான எழுத்து வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. எழுத்து வடிவம் இல்லாத மொழிகளும் இவ்வுலகிலே உண்டு.

எழுத்துக்களுக்கு வடிவங்கள் இருப்பது போன்று எண்களுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. அவற்றிலே முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள நாம் பயன்படுத்தும் எண்களை உலகுக்குத் தந்தது எந்த நாடு?

இந்தியா உலகுக்கு பல நல்ல விடயங்களைத் தந்துள்ளது. அவைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துவருகின்றன. இயற்கை வைத்திய முறைகள், யோகக்கலை, சதுரங்கம் (செஸ்) , ஆன்மீகத்தத்துவங்கள் போன்றன அவற்றுள் ஒருசிலவாகும். இவைகளைப் போலவே, எண்களையும் உலகுக்குத் தந்தது நமது இந்தியாதான்.


இந்த எண்கள் இந்தியாவில் உருவாகி, அரபு நாடுகள் வழியாக ஐரோப்பாவைச் சென்றடைந்துள்ளது. எனவேதான் இந்த எண்கள் இந்து-அரேபிய எண்கள் என்றும், அராபிய எண்கள் என்றும் சொல்லப்பட்டு வருகின்றது.

நாம் எண்களையும், எழுத்துக்களையும் இடதுபக்கத்தில் இருந்து வலதுபக்கமாக எழுதுவோம். அரேபியர்கள் அரபு எழுத்துகளை வலது பக்கத்தில் இருந்து இடதுபக்கமாக எழுதுவார்கள். ஆனால் எண்களை மட்டும் இடதுபக்கத்தில் இருந்து வலது பக்கமாக எழுதுவார்கள். இதுவொன்றே இந்து-அரேபிய எண்கள் எனக் குறிப்பிடப்படும் எண்கள் இந்தியாவில் இருந்துதான் உருவாகியுள்ளது என்பது வெளிப்படை.

அதே போல ஆறாம் நூற்றாண்டில் பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்ததும் இந்தியாதான். அரேபியர்கள் பூஜ்யத்தை சிப்ரா (SIPHER) அல்லது சைபர் (SIFR) என்றழைக்கின்றனர். இதுவே ஆங்கிலத்தில் சைபர் (CIPER or CYPHER) என்றழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் சுப்ரா (SUBHRA) என்ற சம்ஸ்கிருத சொல்லோடு ஒத்துவருவதால் எண்கள் நம்நாட்டில் தான் தோன்றியது என்பதற்கு இதுவும் ஒர் ஆதாரமாகும்.

தமிழிலும் எண்களுக்குத் தனி வடிவம் இருக்கின்றது. அவை பின்வருமாறு அமைகின்றது


(we need a pointer device to show the tamil numbers)

பெரும்பான்மையான தமிழ் எண்களை உற்று நோக்கும் போது, நாம் பயன்படுத்தும் இந்து-அரேபிய எண்களுடன் ஒத்து வருவதைக் காணலாம்.

குறிப்பாக தமிழ் எண் 'உ' 2 என்ற இந்து-அரேபிய எண்ணோடு ஒத்துவருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆக எண்களைக் கண்டுபிடித்தது இந்தியா என்பது வரலாற்று உண்மை என்பது மெத்தப் பெருமை தரும் அதே வேளை தமிழ் எண்களும், அதற்கு உறுதுணையாக இருந்திருக்கும் என ஒர் ஆய்வு செய்வது காலத்தின் அவசியமாகும்.

Friday, December 22, 2006

Off the Beaten Path: Kolli Hills

Kolli Hills ('Kolli malai') is a small mountain range located in central Tamil Nadu, mostly in the district of Namakkal. The mountain ranges are about 1000 to 1300 meters in height and cover an area of approximately 280 square km. Kolli Hills is part of the Eastern Ghats, which is a mountain range than runs mostly parallel to the east coast of South India. The mountains are relatively untouched by tourism and still retain their natural beauty. In the first in a series of articles about lesser-known regions of Tamil Nadu and India, we give you a guided tour of the Kolli Hills mountain range.

Kolli Hills is featured in several works of classical Tamil literature such as Silappathigaram, Manimegalai, Puranaanooru and Ainkurunooru. The region was ruled by Val Vil Ori around 200 A.D., who is praised as one of the seven great philanthropists of ancient Tamil Nadu. His valor and marksmanship are sung by several poets, and his exploits are a popular part of folklore. Ori is said to have killed a lion, bear, deer and a boar with a single arrow. The hills were guarded by ‘Kollippavai’, a female statue with magical powers. It used its charming smile to mesmerize and deter anyone who set foot on the mountains with bad intentions. The mountains have several mythological legends associated with them, and often come across as an eerie place in contemporary tales due to the unexplored and less traveled terrain.

Apart from its historical significance, the mountains are covered with evergreen forests, but increasing areas of forests are cleared for farming. Important farm products of the mountain ranges include coffee, tea, jackfruit, pineapple, black pepper and other spices. Rice and other minor millets form the staple food of the tribal people who inhabit these mountains. The jackfruit grown on these mountains is well known for its delicious taste and fragrance and is best savored by soaking in wild honey that is also harvested from these mountains. The mountains are covered by lush green vegetation in the spring and monsoon, and are streaked with streams which add to its pristine beauty.

The most popular attraction on these mountains is the Agaya Gangai (Ganges from the sky) waterfalls. Reaching the waterfalls requires an hour long hike through a steep trail, and hiking back uphill is not recommended for those who dislike physical workouts. They can however take a dip in the river near the beginning of the trail. The mountain is also a site of pilgrimage, the important destination being the Arapaleeswarar temple located nearby. The end of the trail is separated from the base of the waterfalls by a body of flowing water, and is just an easy swim away. Adventurous hikers are recommended to follow the course of the river down from the base of the waterfalls where it flows through large rocks and provide serene solitude as well as a good workout.

The government also maintains a pineapple research farm where hybrid varieties are created. Research about medicinal plants is also pursued on these mountains. The government holds a tourism festival in August, and mountains can be reached by road easily from Namakkal (50 km) or Salem (100 km). The drive is scenic and is a steep climb through 72 hair-pin bends.

-Senthil Nachimuthu.

கீதாச்சாரம்

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
நன்றி நீலமேகம்.

Geetha's Gist
Whatever happened,Happened nicely.
Whatever is happening,Is happening nicely.
Whatever is going to happen,Will also happen nicely.
What did you loose of yoursloose it,
what did you bring in?
What did you make, for it to go useless?
Whatever you took You took it from here.
Whatever you gave outIt was given out from here.
That which is yours todaybe another's tomorrowOn another day,
it will become someone else's.
This is universal truth My creation's meaning.

-Sri Krishna Baghwan

ஆசிரியர் உரை

ஆசிரியரிடமிருந்து....

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! - நாமக்கல் கவிஞர்


யூட்டா தமிழ்ச் சங்கத்தின் முதழ் காலாண்டு இதழான பனிமலரை அமெரிக்கத் தமிழ் நெஞ்சங்களுக்கு தயாரித்து அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இப் பணியை என்னிடம் மிகுந்த நம்பிக்கையோடு வழங்கிட்ட யூட்டா தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், நண்பருமான திரு.விவேகாநந்தன் நடராஜன் மற்றும் சங்க மேலாண்மை குழுவினர்கள் அனைவருக்கும் என் நன்றிகலந்த வணக்கங்கள்!


இவ்விதழின் முதன்மை நோக்கமாக, யூட்டா மாகணத்தில் நம் கலை, இலக்கியம், பண்பாடு என பல்வேறு விதைகள் தூவப்பட்டு, எதிர் காலத்தில் இவையாவும் பூஞ்சோலைகளாய் பூத்து, ஆலம்போல் தழைத்து அதன் விழுதுதை போல் தமிழை தாங்கி நிற்கும் என்கிர நம்பிகையில் தான்!

அன்பார்ந்த நண்பர்களே, அன்னைத்தமிழ் புதல்வர்களே கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடித் தமிழர்களே! விண்ணில் பறந்து வந்தாலும், புவியைவிட்டு நிலவுக்கே போனாலும் தமிழ் மண்ணுக்கே என்றும் சொந்தகாரர்களே யூட்டாவில் சங்கமித்தோம் தமிழுக்கு சங்கம் அமைத்தோம். நம் இலக்கு வானம் என்றால் மிகையாகது.

பல பணிகளில் ஒரு பணியாய் "பனி மலர்" காலாண்டு இதழ் இலக்கியம், கலாச்சாரம், பண்பாட்டு கட்டுரைகள், கவிபேழை, அறுசுவை, மழலை மருதம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நம் சான்றோர்களின் தமிழ் தாகம் தணிக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை!

அடுத்த பனி மலர் எதிர்வரும் தமிழ் புத்தாண்டில் மலரவிருக்கிறது. அதற்கான படைப்புகள் அனைத்து தரப்பினரிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.


-ராஜசேகரன்,
ஆசிரியர்,
பனி மலர்

Wednesday, December 20, 2006

அவன்

காதலே கனவுகளாய் சிலருக்கு
கனவுகளே காதலாய் சிலருக்கு - ஆனால்
இவ்வுலகில்காதல் தாக்கமே உணராத உயிர் உண்டா?
இருந்தால் கூறுங்கள் - அங்கேஇதயம் துடிக்கிறதா என்று பார்ப்போம்!

அவளுக்கு, அவன் அத்தான் முறை
அவனுக்கு, அவள் அத்தை மகள்
முறையால், முறையாக வந்ததுதான் அந்த உறவு
அவள் பெயர் அமுதா. பெயரமுதா? அழகானவள்
அவன் அறிந்த ஒரே பெண் என்பதினாலோ
என்னவோஅமுதாவை அழகி,
பேரழகியென்றே வடித்தது அவனிதயம்
ஒரு பெண்ணின் அழகை அளவிட இயந்திரம்முண்டா?
அவனவன் இமைகளைத் தவிர?


கம்பராமாயனத்திற்கு சீதை அழகி
உதயகுமாரனுக்கு மணிமேகலை அழகி
கிரேக்க இலிதியத்திற்கு ஹெலன் அழகி
அவனுக்கு அந்த அமுதாதான் அழகி!
பத்து வயதில் பாவாடை அழகி
பதினாறு வயதில் தாவணி அழகி
சேலைக்கு மாறியதால் விலகிய மாராப்பழகி
மார்டன் குமரி சுடிதார் அழகி

ஆடை தவிர்த்து எந்த ஆடவனாவது பெண்ணை
அழகி என்று சொன்னதுண்டா?
அவன் சொல்லியிருக்கிறான் அமுதாவைப் பார்த்து!
அடியே அமுதா உந்தன் ஆடைகள் அழகல்லஅவை மறைத்திருக்கும் மாடங்களும் அழகல்லஅன்னமே உன்
அகமிருக்கும் "அன்பே" எனக்கழகு.


இறைவன் படைப்பின் ரகசியம் அறியாவிடின் யாவும் அழகுதான்
அறியும் முன்னே அவளது அகம் தெரிந்தால் அது பனைமர உறவு
பலன் பாராது பலமாய் நிலைத்திற்கும் அன்பு!

அவளை அறிந்தபின்னே அகம் தெரிந்தால் அது தென்னைமர உறவுமுளைப்பால் தந்தால் தலைப்பால் தரும் அளவான அன்பு!

அவளை அளந்த பின்னே அகல நேர்ந்தால் அது வாழைமர உறவு
வளமாய் இருந்தால் மட்டுமே நலமாய் இருக்கும் அன்பு!
ஆக அவன் அமுதாவிடம் பரிமாறியதோ பனைமர அன்பு


செவத்த பாத்திமாவும் கருத்த மீனாவும் இருக்க
பாதி ஆண்களுக்கு பாத்திமா அழகி
மீதி ஆண்களுக்கு மீனா அழகி
மொத்தத்தில்கருப்பியும் செவப்பியும் அழகிகளே
இதுவெறும் புற அழகின் வகைப்பாடே!
ஆனால் அமுதாவோ உள்ளம் கொடுத்து உயிரை எடுக்கும் அழகி.


அறிந்த நாளில் இருந்தே அவனை 'அத்தான்' என்றுதான்அழைப்பாள் - இது அத்தையின் கண்டிப்பான கட்டளை!சில நேரங்களில், விளையட்டில் தோற்றுவிட்ட கோபத்தில்அமுதா அவனை பெயர் சொல்லி அழைத்ததுமுண்டு! அழைத்து அத்தையிடம் அடி வாங்கியதும்முண்டு! - அத்தைக்கு அவ்வளவு பாசம் அவன் மீது-ஓன்று விட்ட உறவைஒன்று சேர முயற்சித்தாளோ என்னவோ?

அவன் பெயரைச் சொன்னதால் அடிவாங்கிய அமுதாஅடுத்தடுத்த விளையாட்டில் தோற்றதாய் அவனுக்கு நினைவில்லை.


காலாண்டு.. அரையாண்டு..முழுவாண்டுத் தேர்வுகள் முடிந்து - பள்ளிவிடுமுறை விடும்போதெல்லாம் - அவர்கள் வீடு முறை மாறிவிடும்! ஓன்றுஅமுதா வீட்டில் அவன் - அல்லது
அவன் வீட்டில் அமுதா!
விடுமுறை நாட்கள் நகர்வது - அவர்களுக்கு
வினாடிகள்தான், விளையாட்டுகள்தான்


தன் தம்பியிடமே தகரவண்டிக்குதகராறு செய்பவன் - அமுதாவுக்கு அல்லிமலர்களை பறித்துக் கொடுப்பதென்ன?
அடுக்குமல்லி தோடுத்து கொடுப்பதென்ன?
கொல்லைத் துளசியை நன்னீரில்கழுவி சுவைக்கச் சொல்வதென்ன?
அவள் பல்லை காக்க கடிய கரும்பை உரிந்துக் கொடுப்பதென்ன?
இப்படி ஏராளம் ஏராளம் - அவளென்றால்
அவன் தாராளம் தாராளம்!


ஒருமுறை - நீச்சல் கற்றுக் கொள்வதற்காக
அமுதாவின் முதுகில் சுரைகுடுவையைக் கட்டி
அவளைக்கிணற்றில் தூக்கிப்போட்டார் அவன் தந்தை
அன்று, அவள் போட்ட அலறல் சத்தம் - இன்னும்
அவன் காதுகளை அடைக்கிறது - அதுதான்
அமுதா, முதலும் கடைசியுமாய் கிணற்றில் குதித்தது!

நீந்தி வருவாளா?


-அவன்

Tuesday, December 19, 2006

Hi-Q-கவிதைகள்

திருமதி வசந்தி ராஜசேகரிடம்மிருந்து

இதயச் சோலையில
ஒரு தார்ச்சாலை
காட்டியோமையோபதி
உணவில் சுவை
உடலில் சுமை
டையாபட்டிஸ்
கள்ளிப்பட்டி கவிதா
கல்லூரியில் கவிடா
ஆங்கில மோகம்
திரு ராஜசேகரிடம்மிருந்து
கிழிந்து கிடப்பது -அவன்
கோவணம் மட்டும்மல்ல வாழ்க்கையும் தான்
விவசாயி
அணைந்தது விளக்கு
எரிந்தது பூ
முதலிரவு.
திரு. அருள் - நியூயார்க் தமிழ் சங்கம்
நெஞ்சழுத்தம்
அடியே பெண்ணே!
பள்ளியில் நான்
காற்றழுத்தம் படித்தேன்
நீரழுத்தம் படித்தேன் - ஆனால்
நெஞ்சழுத்தம் படிக்கவில்லை
அதனால்தனோ என்னவோ
இன்று-
உன் நெஞ்சழுத்தத்தைக்
கணக்கிட முடியாமல்
நான் -
கண்ணீரில் முழுகிப் பொகிறேனடி!
காதல் ஜெய்க்கும்
அன்பே!
நாம்
பசித்திருந்தும் தனித்திருந்தோம்
தனித்திருந்தும் பொறுத்திருந்தோம்!
பசித்திருப்பதால் -
ஒவ்வொரு துளியும் ருசிக்கும்!
தனித்திருப்பதால்-
ஒவ்வொரு கூடலும் இனிக்கும்!
பொறுத்திருப்பதால்-
நம் காதல் பூமியை ஜெய்க்கும்!
திருமதி முருகேசன் அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனிமலர் இதழுக்காக எழுதப்பட்டது.
உறவுகள்

நெருங்கிய சொந்தங்களின்
நெருக்கம் தூரத்தில் இருக்கும்பொழுது.

கடிகாரம்


கால்கள் இல்லை
ஆனாலும்
ஒலிம்பிக்கில்
உனக்கே
தங்கப்பதக்கம்.

மழை


யானை இருந்தாலும்,
இறந்தாலும்,
ஆயிரம் பொன்
நீ வந்தாலும்,
வராவிட்டாலும்,
கண்களில் கண்ணீர்.

வந்தது பனிக்காலம்

திரு.ஸ்ரீலிங்கம் அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனிமலர் இதழுக்காக எழுதப்பட்டது.

விண்தொடும்
மலைச்சாரல்கள்
வெண்பனிப்
பெரும் தூறல்கள்
சில்லனவே
வீசும் மென்காற்று
மெல்லியதாய்
பனிப் பொலிவு.


பச்சை மரக்கிளைகள்
பசுமையினை தான் மறந்து
இச்சையுடன் வெண்பனியை
இறுகத்தான் தழுவியதே
உச்சிச் சூரியனின்
உஷ்ணம் பொருக்காது
வீசு மனற் காற்றிலே
வெண்பனியைத் துறந்ததுவே.

கருந்தரைகளெல்லாம்
கருப்பினைப் போக்கியே
விருப்புடன் வென்பூச்சை
வேண்டியே ஏற்றதுவே
சாலையில் வேகமாய்
சவாரிக்கும் வாகனங்கள்
மெல்லவே ஆமையாய்
முணுமுணுத்து ஊர்ந்ததுவே.

கையாலே பனிப்பந்தை
கவனமாய் உருட்டியே
பையவே பனிமனிதனை
பவ்வியமாய் உருவாக்கி
வீட்டுத் தோட்டத்தில்
வீறுடன் நிற்கவைத்து - சிறுவர்
கூடிக் களிக்கின்ற
தளிர்க் காலம் வந்ததுவே.


திருமதி அனுராதா அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனிமலருக்காக எழுதப்பட்டது.

மனிதத்தை மட்டும் அடிப்படையாக்கி

உலக நடப்புகளில் ஒற்றுமை
-ஒன்றில் மட்டும்!
உயிரின் மதிப்புணரா தீவிரவாதத்தில்!

இந்தியத் தாயின் நெற்றிப்பொட்டு - இன்று
நனைகிறது இரத்தச்சொட்டில்

காஷ்மீர் செடிகள்
துப்பாக்கிகளால் பூப்பூக்கின்றன

இராமாயணத்தை அலங்கரித்த இலங்கை
இன்று குருஷேத்திரக் களமாய்!

மத்தியக் கிழக்கென்ன விதிவிலக்கா?
மரபுகட்கு மதத்தினை மாலையாக்கியதில்
மானுடம் ஆவதோ சிதறல்களாய்

பயிர் அறுவடை நிறுத்திவிட்டு - உலகெங்கும்
உயிர் அறுவடை தொடங்கியதோ ?

அமைதியின் சரணாலயங்கள் கூட
அனுகுண்டுகளால் மரணாலயமாய்

அவரவர் வீடுகளே
அவரவர் கல்லரைகளாய் !

புண்ணாய்க் கிடக்கிறது வையகம்
மருந்திடல்த் தேவையில்லை தாமத்ம்.

அன்பெனும் (தீப)பந்தம் இருக்க
அம்பெனும் தீப்பந்தம் எதற்கு ?

அமைதிப் பேச்சுக்கள் தொடரட்டும்
அயர வேண்டாம் உடனடித் தோல்விக்காய் !

என் மானுட நண்பணே !
எல்லாம் ஒளிதான் ! - எனினும்
எரிகல்லாய் இராது
சூரியனாய் இரு!

தோட்டாக்காள் பறப்பது பெரிதல்ல
நினைவிருக்கட்டும் ஒன்றே ஒன்று
இந்நிலை தொடந்தால் - நாளை
உன் மழலை விளையாட - மண்ணல்ல
துப்பாக்கி ரவையே மிஞ்சும் !

மதத்தின் சாயம் தொலைத்து
நிறத்தின் பேதம் தகர்த்து
நினைவில் கொள்வோம்
மனிதத்தின் மகத்துவம் மட்டும் !

இமயம் இன்றும் இடிந்துவிடவில்லை
குமரி எங்கும் குறுகிவிடவில்லை

இன்னும் நம்பிக்கை இருக்கிறது
இளைய பாரதமாம் பிரவாகத்தின் மேல் !

நிதர்சனத்தில் தீவிரம் புரிந்து
நிறம், மதம், பேதம் மறந்து
மனிதத்தின் அடிப்படையில் இணைந்து
மானுடம் தளிர்க்கச் செய்வோம்.

Thursday, December 14, 2006

கரிகால சோழன்

திருமதி இந்திரா நீலமேகம் அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனிமலர் இதழுக்காக எழுதப்பட்டது.

தமிழர் வரலாறு மிகவும் பழமையானது. ஆதி மனிதன் காலத்திலிருந்தே தமிழ் நாட்டில் மனிதர் வாழ்ந்தனர். வரலாற்றில் மாபெரும் சம்பவங்களும், மிகவும் புகழ் பெற்ற பெருமான்களும் நல்லாட்சி புரிந்தனர். இவர்கள் நிர்மானித்த பெரும் ஊர்களும், பள்ளிப்படைகளும், கோவில்களும் அணைகளும் இன்றும் உள்ளன. தமிழர்கள் ஒரு காலத்தில் கடல் கடந்து பல கீழ்நாடுகளில் கோலோச்சிய காலம் யாவரும் அறிந்ததே. போர்த் தொழில், கப்பல் வல்லமை, வணிகம், கலை, அரசியல் அனைத்திலுமே மேம்பட்டவர் தமிழர்.

சரித்திரத்தில் தாரைகளாய் மின்னிய சிலரைப் பற்றிக் காண்போமா!

கரிகால சோழன் - - Karikaala chozlan (120 B.C)- சங்க கால சிறப்பெய்தியவன்

Karikaala was the son of prince Ilamchetchenni (இளம்சேட்சென்னி), of Uraiyur, the one who had the many racing chariots.Soon after his birth he lost his father.Rival nobles usurped the kingdom.In the political turmoil, the young prince went into hiding.Able ministers sent the royal elephant to find him.Legend says that the elephant found him amidst a group of urchins on the street and garlanded him.However the rival nobles imprisoned the young boy by trickery and set fire to the prison in the night.The prince escaped but was scorched the both his legs which turned them black.Hence, his name "Karikaalan" the black legged prince.He later won back not only his own lands but brought under his sway much of the populated lands of the Tamil region.The most famous was the battle of Venni[near Thanjavoor] where he broke the confederacy of the pandya, chera and eleven other important chieftains.He is famous for having formed treaties with many of the the northern Indian rulers.One feat that is well remembered and evidenced till this day is his engineering enterprises to raise the banks on sides of the river Cauveri.This transformed the land into a major food producing area by controlling the seasonal floods and became the foundation of for later empires.

Karikaala rules form his capital of Uraiyur and later from Kanchipuram around 120 BC.His chief wife was a Velar princess.They had three children Nalankilli,Nedunkilli and Mavalattan.

Other luminaries of Tamil people will be featured later.

Saturday, December 09, 2006

யோகா - இந்தியாவின் கொடை

திரு.ஸ்ரீலிங்கம் அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனி மலருக்காக எழுதப்பட்டது.
=====================================================

நமது இந்தியா உலகுக்கு அறிமுகம் செய்த உன்னதமான பல விஷயங்களிலே யோகக் கலையும் ஒன்று. இந்த உன்னதக் கலையின் மேலான நன்மைகளை நாம் அறிந்திருக்கின்றோமோ இல்லையோ அமெரிக்கர்கள் வெகு நன்றாகவே அறிந்திருக்கின்றனர். அதனால் தான் போலும் அமெரிக்காவிலே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28ம் நாளை யோகா தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

நம்மவர் வெகுவாகப் பயிலாத அல்லது பயன்படுத்தாத இந்த யோகக் கலையானது எப்படி யாரால் அமெரிக்காவுக்கு வந்தது என்பது பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நேர்க்கமாகும்.

1893-ம் ஆண்டு சிக்காகோ மாநகரிலே நடைபெற்ற உலக சமய மாநாட்டிலே, சுவாமி விவேகானந்தர் ஓர் பேருரை ஆற்றியது முதல் கிழக்கத்திய சிந்தனைகள் மேற்கு நோக்கி வரலாயின என்று சொல்லலாம்.

1920-ம் ஆண்டு சுவாமி பரமஹம்ச யோகானந்தா பாஸ்டனில் நடைபெற்ற ஒரு சமய மாநாட்டுக்காக அவரது குருவான பாபாஜி அவர்களால் அழைக்கப்பட்டார். 1920 முதல் 1935-ம் ஆண்டு வரை "கிரியா யோகாவை" அமெரிக்காவில் அறிமுகம் செய்ததோடு பல்லாயிரக் கணக்கானோருக்குப் பயிற்சியும் அளித்தார்.

1947-ம் ஆண்டு இந்திராதேவி என்பவர் ஹாலிவுட்டில் ஒரு யோகா பயிற்சி மையம் திறந்தார் என்றாலும் இக்காலகட்டத்தில், யோகா பற்றி அதிகளவு அறிவை, அமெரிக்கர்களுக்கு ஊட்டியவர் ரிச்சர்டு ஹிட்டல்மேல் என்பவராகும். இவர் யோகா பற்றி அதிகளவு புத்தகங்களை வெளியிட்டதோடு, 1961-ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி வாயிலாகவும் யோகாவைப் பரப்பியுள்ளார். இவர் ரமண மகரிஷியின் சிஷ்யராக இருந்த போதும், ஆன்மீகம் தவிர்த்த ஒரு யோகக்கலையை உடல் நலம் பேணல் என்ற கருத்தில் அறிமுகம் செய்தவராகும்.

1950-1960 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில், வால்ட் மற்றும் மெகானா பெப்டிஸ்ட் ஆகியோர் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் ஓர் யோகா மையத்தை நிறுவினார்.

1958-ம் ஆண்டு சுவாமி விஷ்ணு தேவானந்தா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு வந்து யோகப் பயிற்சி அளித்துள்ளார். அவர் எழுதிய THE COMPLETE ILLUSTRATED BOOK OF YOGA என்ற நூல் யோகக் கலைக்கான ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது .

1960-ம் ஆண்டு இமாலய மலைப் பிரதேசத்தில் இருந்து வந்த மகரிஷி மகேஷ் யோகி, ஒரு யோகா மற்றும் தியான மையத்தை நிறுவினார்.இவரது யோக, தியானம் மற்றும் ஆன்மீக வழியை பின்பற்றி 40,000 ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.மற்றும் 1200 மையங்கள் உருவாகியுள்ளன.சுமார் நான்கு கோடிபேர் இவரது போதனைகளை பின்பற்றி வருகின்றனர்.உலகெங்கும் சுமார் 108 நாடுகளில் இவரது மையங்கள் உள்ளன.

1960-ம் ஆண்டு யோகி அம்ரித் தேசாய் யோகக் கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.1966ம் ஆண்டு பென்சில்வேனியாவில் யோக சபை ஒன்றை இவர் உருவாக்கினார்.

1966-ம் ஆண்டு பீ.கே.எஸ் ஐயங்காரின் புத்தகம் ஒன்று LIGHT OF YOGA என்ற பேரிலே அமெரிக்காவில் பிரசுரமானது.1973-ம் ஆண்டு மிச்சிகனுக்கு வரவழைக்கப்பட்ட இவர் தன் பணியைத் தொடங்கினார்.

யோகக் கலையை அமெரிக்காவில் பரப்பியவர்களுள் சுவாமி சச்சிதானந்தாவும் ஒருவராவார்.1966-ம் ஆண்டு நியுயார்க் வந்த இவர், விர்ஜினியா நகரிலே INTEGRAL YOGA INSTITUTE என்ற ஒன்றைத் தோற்றுவித்தார்.(தமிழகத்தில் கோயம்பத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் இதன் ஓர் கிளை உள்ளது.சுவாமி சச்சிதானந்தா இந்தியா வரும் பொழுதெல்லாம் இம் மையத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.அதனை நேரில் கேட்கக் கூடிய பல சந்தர்ப்பங்கள் எனக்குக் கிட்டியதை நான் மிக மகிழ்வோடு நினைவு கூர்கின்றேன்)

இவ்வாறு பலரால் இங்கு அறிமுகம் செய்யப்பட்ட யோகக் கலை 1970-ம் ஆண்டளவில் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகி விட்டது. இக்கால கட்டத்தில் பாபா ஹரிதாஸ், டி.கே.வி.தேசிகாச்சார், பட்டாபி ஜேர்ய்ஸ் போன்றோரும் தம் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

நமது யோகக் கலை அமெரிக்க மண்ணிலே மிகப் பிரபல்யம் அடைந்ததற்குக் காரணம் அது உடலுக்கு வலிமை தந்து, மன உளைச்சலைக் குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தக் கூடிய உடற் பயிற்சிகளையும், ஆசனங்களையும் கொண்டது என்ற ஓர் கருத்தேயாகும்.

அதனால் தான் போலும் சுமார் 20 கோடி அமெரிக்கர்கள் யோகப் பயிற்சி செய்து வருகின்றனர். யூட்டா போன்ற ஒரு சில மாநிலங்களைத் தவிர, மற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கும் அதிகமான பயிற்சி மையங்கள் உள்ளன.

நம் நாட்டிலே உருவான இக்கலையானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உருவாகி வருவதும், ஆங்காங்கே பயிற்சி மையங்கள் ஏற்படடுத்தப்படுவதும், பள்ளிகளிலும் கூட போதிக்கப்படுவதும் நமக்கு மகிழ்வைத் தருகின்றது.

ஆன்மீகம், தீவிர அனுஸ்டானங்கள், சீரிய ஒழுக்கம் ஆகியன உள்ளடக்கப்பட்ட ஒன்று தான் யோகக் கலை என்ற கருத்து முன் வைக்கப்பட்டதால், சமூகத்தின் எல்லாதரப்பினரும் யோகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், இன்று மேற்கூறிய காரணங்கள் முன்னிலைப்படுத்தப்படாமல் உடல் ஆரோக்கியம்,தியானம்,மன அமைதி போன்றன முன்னிலைப்படுத்தப்படுவதால் யோகக் கலை, இந்தியாவிலும் வெகுவாக வளர்ந்து வருகின்ற செய்தி நமக்கு பெறும் மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கின்றது.

Sunday, December 03, 2006

முகவரி - இது காலத்தால் தொலைக்கப்பட்ட ஒருவனுடையது.

உலக அதிசயங்களுக்குள் ஒன்றான எகிப்திய பிரமிடுகள், தாஜ்மஹால் இதனை விட பல சிறப்பம்சங்களைப் பெற்ற ஒரு இடம் இது. ஆனால் மற்றவை பெற்றிருக்கும் புகழில் ஒரு விழுக்காடு கூட இது உலக மக்களிடம் பெறவில்லை ஆனால் அதன் சிறப்பு அம்சங்கள் என்னவென்று தெரியுமா?

கிரேட் பிரமீட் கீஷா-வை கட்டுவதற்கு தேவையான கற்களை காட்டிலும் அதிக கற்களை கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் அது.

இருபது தாஜ்மஹாலை தன்னுள் எந்த ஒரு இடநெருக்கடியும் யின்றி தன் சுற்று புற சுவற்றுக்குள் அடக்கிக் கொள்ளும் கட்டிடம் அது.

இதன் கட்டமைபிற்கு பயன்படுத்தப்பட்டவற்றில் 90 விழுக்காடுக்கும் அதிகமானது கிரைனட் எனப்படும் உலகின் கடினமான கற்களில் ஒன்றாகும்.

உலக வரலாற்றின் லட்சியவாதி அரசர்களுக்குள் ஒருவனால் கட்டப்பட்டது.

தான் சார்ந்திருந்த சமுதாயத்தின் கலைகளை கிழக்காசிய நாடுகளுக்கு பரப்பியவனால் கட்டப்பட்டது.

இந்தியாவின் தலைசிறந்த போர்வீரன் மற்றும் நிர்வாகி அவன்.

அவனது காலத்தில் உலகின் மிகச் சிறந்த கப்பல் படையின் தளபதி அவன்.

அந்த கட்டிடம் கட்டப்பட்ட பொழுது அது தான் இந்தியாவின் மிக உயரமான கட்டிடம். இரண்டாவது உயரமான கட்டிடம் அதன் உயரத்தில் 10-ல் ஒரு பங்கே?

அந்த அவன் யார் என்றும், அந்த கட்டிடம் எது வென்றும் உங்களால் யூகிக்க முடிகிறதா ?

.

.

.

அந்த அவன் பொன்னியின் செல்வன், அருள்மொழிவர்மன் என்ற இயற்பெயர்களைக் கொண்ட ராஜராஜ சோழன்.

அந்த கட்டிடம் (கோவில்) தஞ்சை பெரிய கோவில்.

தஞ்சை பெரியகோவில் கி.பி 1000 க்கும் 1010க்கும் இடைப்பட்டகாலத்தில் அருள்மொழிவர்மனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் முக்கிய கடவுள் சிவபெருமான். உலகின் மிகப் பெரிய நந்தி இந்த கோவிலின் முன் தான் உள்ளது. இந்த நந்தி 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இக்கோவிலை பராமரிக்க 100 க்கும் மேற்ப்பட்ட அர்ச்சகர்கள், 300 க்கும் மேற்ப்பட்ட நடன மாதர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இக்கோவிலுக்கான பால், மற்றும் இதர தேவைகளுக்காக 4000 பசுமாடுகள்,
7000 ஆடுகள் மற்றும் 30 எருதுகள் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்திற்கும் தேவையான பொருளாதார மூலம் ராஜராஜனாலே அளிக்கப்பட்டது.

இவனது ஆட்சிகாலத்தில் சோழசாம்ராஜியமானது இந்தியா, இலங்கை, இன்றைய சிங்கப்பூர், மலேசியா மற்றும் கம்போடியாவின் பெரும்பான்மையான பகுதிகளையும் கொண்டதாக இருந்தது .

இனி ராஜராஜனை பற்றி ஒவ்வொரு பனிமலரிலும் பார்ப்போம்.

============ END HERE =========

இணையதள வாசிப்பாளருக்காக இந்த ஆவணப்படத் தொகுப்பு. இது ராஜராஜனின் பெருமையையும் தமிழரின் பெருமையையும் உலகுக்கு உணர்த்தும் ஒன்று.

Rajaraja the Great. The great hindu king ever ruled. Historical Temples that he built.